தேர்தல் ஆணையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட திரிணமுல் எம்.பி.,க்கள் கைது
தேர்தல் ஆணையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட திரிணமுல் எம்.பி.,க்கள் கைது
UPDATED : ஏப் 08, 2024 06:04 PM
ADDED : ஏப் 08, 2024 06:02 PM

புதுடில்லி: மத்திய அமைப்புகளை பா.ஜ., தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு முன்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி, டில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு முன்பு திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.,க்கள் குழு இன்று (ஏப்.,8) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. 24 மணி நேர தர்ணா போராட்டத்தை நடத்திய திரிணமுல் எம்.பி.,க்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



