திரிணமுல் காங். நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் ரெய்டு
திரிணமுல் காங். நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் ரெய்டு
ADDED : ஜன 25, 2024 01:59 AM

கோல்கட்டா திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜகான் ஷேக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனைக்கு சென்ற போது மர்ம கும்பல் தாக்கி 19 நாட்கள் ஆன நிலையில், நேற்று மீண்டும் அவரது வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜகான் ஷேக்கிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சந்தேஷ்காளி பகுதியில் உள்ள அவரது வீட்டில், அமலாக்கத்துறையினர் ஜன., 5ல் சோதனையிட சென்றனர்.
அப்போது அவர்களை தடுத்த ஒரு கும்பல் அதிகாரிகளை சரமாரியாக தாக்கியது. இதில் மூன்று அதிகாரிகள் காயம் அடைந்தனர். இதையடுத்து தப்பி சென்ற ஷாஜகான் ஷேக் இதுவரை தலைமறைவாக உள்ளார்.
இந்த நிலையில் 19 நாட்களுக்கு பின் மீண்டும் ஷேக்கின் வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
சந்தேஷ்காளி பகுதி யில் உள்ள வீட்டின் கேட்டை உடைத்து நேற்று அமலாக்கத்துறையினர் உள்ளே புகுந்தனர்.
மத்திய ஆயுதப்படை போலீசார் 120 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.