ADDED : செப் 19, 2011 08:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: சாம்பியன் லீக்டுவெண்டி-20 கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் தகுதிசுற்று ஆட்டத்தின் ஏ பிரிவில் இன்று நடந்த போட்டியில் ருகுனா மற்றும் டிரினிடாட் அண்டு டொபாகோ அணிகள் மோதின.டாஸ் வென்ற ருகுனா முதலில் பேட் செய்து 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன் எடுத்தது.
அந்த அணியின் சண்டிமால் அதிகபட்சமாக அரைசதம் அடித்தார்.139 ரன் வெற்றி இலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய டிரினிடாட் அண்டு டொபாகோ, அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பிராவோ44 ரன், கங்கா 39 ரன் ஆட்டமிழக்காமல் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.