ADDED : நவ 04, 2024 06:17 AM

புதுடில்லி: 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழின் குறுக்கெழுத்து புதிர் போட்டியில் பதில்களில் ஒன்றாக பிரபல தமிழ் நடிகை த்ரிஷா பெயர் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் 'தி நியூயார்க் டைம்ஸ்' என்ற நாளிதழ் வெளியாகி வருகிறது. பிரபல நாளிதழான இதில் குறுக்கெழுத்து புதிர் போட்டி குறித்த பகுதியும் வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியான குறுக்கெழுத்து புதிர் பகுதியில், 'தென்னிந்திய சினிமாவின் நடிகை கிருஷ்ணன்' என கேள்வி இருந்தது. இதில் த்ரிஷா என்ற வார்த்தை பதிலாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் குறுக்கெழுத்து புதிர் போட்டியில் தன்னை பற்றி கேள்வி கேட்கப்பட்டிருப்பதை பார்த்து நடிகை த்ரிஷா ஆச்சரியமடைந்தார். இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துதெரிவித்துவருகின்றனர்.