முனிரத்னாவுடன் தொடர்பில் இருந்த முன்னாள் கவுன்சிலர்களுக்கு சிக்கல்
முனிரத்னாவுடன் தொடர்பில் இருந்த முன்னாள் கவுன்சிலர்களுக்கு சிக்கல்
ADDED : அக் 13, 2024 11:03 PM
பெங்களூரு: பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவுடன் தொடர்பில் இருந்த முன்னாள் கவுன்சிலர்கள், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்க, சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்து உள்ளது.
ராம்நகரின் ககலிபுராவை சேர்ந்த 40 வயது பெண் அளித்த பலாத்கார புகாரில், பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா கைது செய்யப்பட்டார். ஹெச்.எச்.வி., பாதித்த பெண்களை பயன்படுத்தி, தனது அரசியல் எதிரிகளை முனிரத்னா 'ஹனிடிராப்' செய்தார் என்று, பலாத்கார புகார் அளித்த பெண் கூறி இருந்தார்.
ஹெச்.எச்.வி., பாதித்தவர்களின் ரத்தத்தை ஊசி மூலம், அரசியல் எதிரிகள் மீது செலுத்தினார் என்றும், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் போலீசாரிடம், பெண் அளித்த வாக்குமூலத்தில் முனிரத்னாவுடன் சேர்ந்து ஹனிடிராப்பில் சில அதிகாரிகள், முன்னாள் கவுன்சிலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டனர் என்றும் கூறினார். இந்த பெண் கூறிய தகவலின்படி, விசாரணைக்கு ஆஜராக முன்னாள் கவுன்சிலர்களுக்கு, சம்மன் அனுப்ப, சிறப்பு புலனாய்வு குழு தயாராகி வருகிறது.