சாலை பள்ளத்தால் நேரிட்ட விபத்து: மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலி
சாலை பள்ளத்தால் நேரிட்ட விபத்து: மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலி
ADDED : செப் 11, 2024 11:36 AM

ஹைதராபாத்; ஆந்திராவில் சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்காமல் மினி லாரியை திருப்பிய போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இன்று காலை ஒரு மினி லாரி ஒன்று முந்திரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தாடிமல்லா என்ற ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் முந்திரி மூட்டைகள் மீது ஏறி தொழிலாளர்கள் 8 பேர் உட்கார்ந்திருந்தனர்.
தேவரப்பள்ளி என்ற இடத்தில் லாரி வந்தபோது சாலையில் பள்ளம் இருப்பதைக் கண்ட ஓட்டுநர் வண்டியை அதில் இறங்காமல் இருக்க திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென அருகில் உள்ள கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோரவிபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்க அவரை அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

