மெகா பள்ளம்! மெதுவாக ரிவர்சில் ஊர்ந்து டிரைவருடன் உள்ளே விழுந்த டிரக்! VIRAL VIDEO
மெகா பள்ளம்! மெதுவாக ரிவர்சில் ஊர்ந்து டிரைவருடன் உள்ளே விழுந்த டிரக்! VIRAL VIDEO
ADDED : செப் 21, 2024 11:45 AM

புனே; புனேயில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி விழ, உள்ளே இருந்த ஓட்டுநர் எகிறி குதித்து உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனேயில் லஷ்மி சாலையில் புத்வேர்பேட் பகுதியில் நகர தபால் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பெரிய டிரக் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதனுள் ஓட்டுநர் அமர்ந்திருந்தார். இந்த வண்டி புனே மாநகராட்சி பணிகளுக்கானதாகும். தபால் அலுவலக வளாகத்தில் கழிவுநீரை அகற்றும் பணிக்காக லாரி கொண்டு வரப்பட்டு இருந்தது.
இந் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்த டிரக், திடீரென பின்னோக்கி நகர ஆரம்பித்தது. அடுத்த ஒரு சில விநாடிகளில் அங்கு திடீரென மிக பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. அந்த பள்ளத்தில் லாரி அப்படியே விழ, என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஓட்டுநர் உள்ளே இருந்து எகிறி குறித்து உயிர் தப்பி உள்ளார்.
தகவலறிந்த தீயணைப்பத்துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று லாரியை சிறிதுநேர போராட்டத்துக்கு பின்னர் மீட்டனர். திடீரென பெரிய பள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்து தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளன.