ADDED : ஜன 28, 2025 02:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன், பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் கடந்த 20ல் பதவியேற்றார். இந்நிலையில், அவருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'நண்பர் டிரம்ப் உடன் பேசியதில் மகிழ்ச்சி. இரண்டாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
'பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். நம் மக்களின் நலனுக்காகவும், உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும், நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்' என குறிப்பிட்டுள்ளார்.