ADDED : ஜன 04, 2025 12:55 AM

மணிப்பூரில், அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்கள் அரசின் நோக்கம். அதற்காகவே, மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினேன். முடிந்தது முடிந்து போகட்டும்; அனைவரும் உட்கார்ந்து பேசி நிரந்தர தீர்வு காண்போம் என்றேன். அதை வைத்து அரசியல் செய்பவர்கள், மீண்டும் கலவரத்தை எதிர்பார்க்கின்றனர்.
பைரேன் சிங்
மணிப்பூர் முதல்வர், பா.ஜ.,
பயங்கரவாதம் தொடர்கிறது!
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், இங்கு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். நேற்று கூட, சில இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. மாநிலத்தில் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.
ஒமர் அப்துல்லா
ஜம்மு - காஷ்மீர் முதல்வர்,
தேசிய மாநாட்டு கட்சி
மம்தாவின் ஆசை இது!
மேற்கு வங்க முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட, மாநிலத்திற்குள் ஊடுருவிய வங்கதேச முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்யாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களை தடுக்கும் எல்லை பாதுகாப்பு படையினரை, முதல்வர் மம்தா விமர்சிக்கிறார்; மேற்கு வங்க மாநிலத்தை வங்க தேசம் போல் மாற்ற ஆசைப்படுகிறார்.
கிரிராஜ் சிங்
மத்திய அமைச்சர், பா.ஜ.,

