ADDED : மார் 07, 2024 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலபுரகி, : ''என்னையும் ஆப்பரேஷன் தாமரை வாயிலாக, பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி நடக்கிறது,'' என, ஆளந்தா காங்., - எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
கலபுரகியில் நேற்று அவர் கூறியதாவது:
பா.ஜ.,வினர் ஆப்பரேஷன் தாமரை மூலமாக, என்னை அக்கட்சிக்கு இழுக்க முயற்சிக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டனர். காங்கிரசில் உங்களுக்கு அநியாயம் நடக்கிறது. கட்சியை விட்டு வெளியே வாருங்கள். பா.ஜ.,வுக்கு வந்தால் வந்தால் லோக்சபா தேர்தலில், சீட் கொடுப்பதுடன், தேர்தல் செலவுகளை பார்த்துக்கொள்வதாகவும், ஆசை காண்பித்தனர்.
இந்த விஷயத்தை முதல்வர் சித்தராமையாவின் கவனத்துக்கு, கொண்டு சென்றேன். நான் எந்த காரணத்தை கொண்டும் நான், காங்கிரசை விட்டுச் செல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

