மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் டியூஷன் ஆசிரியருக்கு 111 ஆண்டு சிறை
மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் டியூஷன் ஆசிரியருக்கு 111 ஆண்டு சிறை
ADDED : ஜன 01, 2025 10:09 PM
திருவனந்தபுரம்:கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ், 44; டியூஷன் ஆசிரியர். காந்த 2019 ஜூலை 2ல், சிறப்பு வகுப்பு எடுப்பதாகக் கூறி, பிளஸ் 1 மாணவியை டியூஷன் சென்டருக்கு வரவழைத்தார். மாணவியை பலாத்காரம் செய்தார். மேலும், அதை மொபைல் போனில் 'வீடியோ'வும் எடுத்தார்.
இதனால் பயந்து போன மாணவி, டியூஷன் செல்வதை நிறுத்தினார். இதையடுத்து மாணவியின் நிர்வாண படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், போலீசில் புகார் செய்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், டியூஷன் ஆசிரியர் மனோஜை கைது செய்தனர். முதலில் குற்றத்தை மறுத்த அவர், கிடுக்கிப்பிடி விசாரணைக்குப் பின் ஒப்புக் கொண்டார். இதையறிந்த மனோஜின் மனைவி, தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி பலாத்கார வழக்கை, திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றம் விசாரித்தது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன் தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மாணவியை பலாத்காரம் செய்த டியூஷன் ஆசிரியர் மனோஜுக்கு, 111 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.05 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆர்.ரேகா தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

