sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

11ம் தேதி மல்லேஸ்வரத்தில் 'டிவி' வரதராஜன் நாடகங்கள்: பா.ஜ., தொண்டர்களுக்கு அறிவுரை

/

11ம் தேதி மல்லேஸ்வரத்தில் 'டிவி' வரதராஜன் நாடகங்கள்: பா.ஜ., தொண்டர்களுக்கு அறிவுரை

11ம் தேதி மல்லேஸ்வரத்தில் 'டிவி' வரதராஜன் நாடகங்கள்: பா.ஜ., தொண்டர்களுக்கு அறிவுரை

11ம் தேதி மல்லேஸ்வரத்தில் 'டிவி' வரதராஜன் நாடகங்கள்: பா.ஜ., தொண்டர்களுக்கு அறிவுரை


ADDED : பிப் 05, 2024 11:09 PM

Google News

ADDED : பிப் 05, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லேஸ்வரம்: 'டிவி' வரதராஜன் குழுவினரின் 'எல்.கே.ஜி., ஆசை, காசளவு நேசம்' என்ற இரண்டு நகைச்சுவை நாடகங்கள், வரும் 11ம் தேதி பெங்களூரில் நடக்கின்றன.

'டிவி' வரதராஜன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் அவரது நாடகங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு.

அந்த வகையில், அவரது ரசிகர்களை மகிழ்விக்க பெங்களூரில் வரும் 11ம் தேதி இரண்டு நகைச்சுவை நாடகங்கள் நடக்க உள்ளன.

நகரின் மல்லேஸ்வரத்தில் உள்ள கிருஷ்ணதேவராய கலாமந்திரா அரங்கில், அன்றைய தினம் மாலை 4:00 மணிக்கு 'எல்.கே.ஜி., ஆசை' என்ற நாடகமும்; இரவு 7:00 மணிக்கு 'காசளவு நேசம்' என்ற நாடகமும் நடக்கின்றன.

சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைக்கும் இந்த இரு நாடகங்களையும் எழுதியவர், 'வேதம் புதிது' கண்ணன். இரண்டு நாடகங்களுக்கும் ஒரே டிக்கெட் தான். 'புக் மை ஷோ' என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விபரங்களுக்கு, 'டிவி' வரதராஜன் 94440 69292; ஷங்கர் குமார் 98403 57705 ஆகியோரது மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us