நாட்டின் முதல் சி.என்.ஜி., ஸ்கூட்டர் காட்சிப்படுத்திய டி.வி.எஸ்.,
நாட்டின் முதல் சி.என்.ஜி., ஸ்கூட்டர் காட்சிப்படுத்திய டி.வி.எஸ்.,
ADDED : ஜன 23, 2025 12:29 AM

'டி.வி.எஸ்.,' நிறுவனம், 20க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தியது. சி.என்.ஜி., ஸ்கூட்டரில் முதல், மின்சார ஸ்போர்ட்ஸ் பைக் வரை பல வாகனங்கள் டி.வி.எஸ்., அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில், 'அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ்., அட்வெஞ்சர் பைக், ஐ - க்யூப் முன்மாதிரி மின்சார ஸ்கூட்டர் மற்றும் ஜூபிட்டர் சி.என்.ஜி.,' ஆகியவை அதிக கவனம் ஈர்த்தன.
அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ்.,: இது டி.வி.எஸ்.,சின் முதல் அட்வெஞ்சர் பைக் ஆகும். இது தற்போது, முன்மாதிரி பைக்காக மட்டுமே உள்ளது. இதில், புதிய 299 சி.சி., லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 35 ஹெச்.பி., பவரையும், 27 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
ஜூபிட்டர் சி.என்.ஜி.,: இது இந்தியாவின் முதல் சி.என்.ஜி., ஸ்கூட்டர் ஆகும். இதில், 1.4 கிலோ அளவில் சி.என்.ஜி., சேமிப்பு டேங்க் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளன. சி.என்.ஜி., டேங்க், சீட்டிற்கு கீழ் பொருத்தப்பட்டுள்ளது. அதனால், பூட் ஸ்பேஸ் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் பொறுத்த வரை, அதே 124.8 சி.சி., இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

