ADDED : ஏப் 23, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வெளிநாட்டுப் பணம் கடத்த முயன்ற இருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பாங்காங் நகருக்கு நேற்று முன் தினம் சென்ற விமானத்தில் செல்லும் பயணியரிடம் சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இரு ஆண் பயணியரிடம் நடத்திய சோதனையில், மொத்தம் 96,000 யூரோ பணம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் இந்திய மதிப்பு 91.72 லட்சம் ரூபாய். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

