ADDED : ஜூன் 21, 2025 07:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில், 10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
உ.பி., மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த ரோஹித் குமார் மற்றும் சாகிப் ஆகிய இருவரும் நேற்று முன் தினம், 10 வயது சிறுவனை வயலுக்கு அழைத்துச் சென்றனர்,
ரோஹித் குமார், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை, சாகிப் 'வீடியோ' எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இதுகுறித்து, சிறுவனின் தந்தை கொடுத்த புகார்படி, போபா போலீசார் வழக்குப் பதிவு செய்து ரோஹித் மற்றும் சாகிப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதேபோல, வேறு ஏதேனும் செயல்களை செய்துள்ளனரா என இருவரிடமும் விசாரணை நடக்கிறது.