தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கொலை வழக்கில் துப்பாக்கியால் சுட்டு இருவர் பிடிபட்டனர்

 கொலை வழக்கில் துப்பாக்கியால் சுட்டு இருவர் பிடிபட்டனர்

 கொலை வழக்கில் துப்பாக்கியால் சுட்டு இருவர் பிடிபட்டனர்


ADDED : மார் 28, 2026 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 02:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லி அருகே உள்ள பாவானா என்ற இடத்தில் நடந்த கொலை தொடர்பாக, போலீசார் நேற்று காலை, டில்லி ரோஹினி அருகே இருவரை சுட்டுபிடித்தனர்.

பாவானா என்ற இடத்தில், கடந்த மார்ச் 19ம் தேதி, தன் வீட்டில் இருந்த ரவி பரத்வாஜ் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பான தாக்குதலில், ரவி பரத்வாஜின் தந்தை உள்ளிட்ட மூவர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொலை தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ஆகாஷ் என்ற பிட்டு மற்றொரு நபருடன் ரோஹினி அருகே இரு சக்கர வாகனத்தில் வருவதாக தகவல் கிடைத்தது.

அவர்களை மறித்த போலீசார், துப்பாக்கியால் சுட்டு அவர்கள் இருவரையும் வீழ்த்தினர். இருவரையும், போலீசார் கைது செய்துள்ளனர்.

பீஹார் மாநிலத்தின் பெகுசராய் என்ற இடத்தை சேர்ந்த ஆகாஷ், டில்லியின் நங்கல் தாக்கரன் என்ற இடத்தில் வசித்து வந்தார். முக்கிய தாதாவான தில்லு தாஜ்புரியா கோஷ்டியை சேர்ந்த அவரை, போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us