டில்லியில் குடிசைகள் எரிந்து இரண்டு குழந்தைகள் பலி
டில்லியில் குடிசைகள் எரிந்து இரண்டு குழந்தைகள் பலி
ADDED : ஏப் 28, 2025 01:12 AM
புதுடில்லி : டில்லி ரோஹிணி 17வது செக்டார் ஸ்ரீநிகேதன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, 800 ஏக்கரில் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று காலை தீப்பற்றியது.
தகவல் அறிந்து 26 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து, மூன்று மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த 800 குடிசைகளும் எரிந்து சாம்பாலாகின. உடல் கருகி உயிரிழந்த நிலையில், இரண்டரை வயது மற்றும் 3 வயதுடைய குழந்தை உடல்கள் மீட்கப்பட்டன. காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், 'ஒரு குடிசையில் பற்றிய தீ, அடுத்தடுத்த குடிசைகளுக்கு பரவியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்ட குடிசைப் பகுதி அருகில் அடுக்குமாடி குடியிருப்பு இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, தீயை அணைப்பது பெரும் சவாலான காரியமாக இருந்தது' என்றனர்.