ADDED : மே 22, 2026 01:48 AM

தானே: மஹாராஷ்டிரா மாநிலம் தானே ரயில் நிலையம் அருகே, காம்தேவி காய்கறி சந்தை உள்ளது. நேற்று அதிகாலை இங்கு திடீரென பிடித்த தீ, அருகேயுள்ள காய்கறி மற்றும் துணிக் கடைகளுக்கும் பரவியது.
இதில், 150க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தன.
அப்போது, சந்தையின் முதல்மாடியில் சிக்கி தவித்த காவலாளி கலு சங்கர் கடேகரை மீட்க, தீயணைப்பு அதிகாரி சாகர் சூரியகாந்த் ஷின்டே, 42, சென்றார். இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இருவர் காயத்துடன் உயிர் தப்பினர்.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்தை நேரடியாக பார்வையிட்டு தேவையான உதவிகள் செய்யும்படி, தானே மாநகராட்சி கமிஷனர் சவ்ரப் ராவுக்கு உத்தரவிட்டார்.
'தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்' என, தானே மாநகராட்சி அறிவித்துள்ளது.
