சாலை விபத்தில் 2 பேர் பலி ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல்
சாலை விபத்தில் 2 பேர் பலி ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல்
ADDED : பிப் 13, 2025 10:05 PM
நிகம் போத் காட்:குடிபோதையில் கார் ஓட்டி, இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014 ஆகஸ்ட் 17ம் தேதி, நிகம் போத் காட் பகுதியில் நடைபாதையில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று ஏறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று ரிஷிகுமார் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
ரிஷிகுமாரை குற்றவாளியாக அறிவித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வீரேந்தர் குமார் கார்தா, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
'நடைபாதைகள் தூங்குவதற்கு அல்ல, பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் மட்டுமே என்பது உண்மைதான். ஆனால் நடைபாதைகள் வாகனங்களை ஓட்டுவதற்கும் அல்ல என்பதும் உண்மை' என, நீதிமன்றம் கூறியது.

