ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
ADDED : அக் 04, 2025 03:19 AM

புவனேஸ்வர்: ஒடிஷாவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பெய்த கனமழையால் மாநிலம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் பலியான நிலையில், இருவர் மாயமாகினர்.
முன்னெச்சரிக்கை வங்கக்க டலை ஒட்டியுள்ள ஒடிஷாவின் தெற்கு கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேலும் வலுவிழந்ததையடுத்து, உட்புற மாவட்டங் களி லும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது.
இது, அடுத்த 12 மணி நேரத்திற்குள் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து சென்று, மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிஷாவின் தென் மாவட்டங்களான கஜபதி, ராயாகாடா, கோராபுட் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால், அங்குள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை மாவட்ட நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தி, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
இதற்கிடையே, கனமழை காரணமாக கஜபதி மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ராயாகர் பகுதியில் வசித்த இருவர் உயிரிழந்த நிலையில், அதே பகுதியில் வசித்த 70 வயது மூதாட்டி மற்றும் அவரது மகன் மாயமாகினர்.
பேரிடர் மீட்பு அவர்களை தேடும் பணியை மீட்புக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேபோல் மகேந்திரகிரி மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அங்கு சென்ற சுற்றுலா பயணியர் 24 பேர் சிக்கித் தவித்தனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேலும் வலுவிழந்து மணிக்கு 6 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசைநோக்கி நகர்ந்தது.
இது, ஒடிஷாவின் கடற்கரை பகுதியான கோபால்பூரை நேற்று மாலை 5:00 மணியளவில் கடந்தது. அப்போது, மணிக்கு 73 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
இதைத்தொடர்ந்து, ஒடிஷாவின் தென் மாவட்டங்களில் கூடுதல் விழிப்புடன் இருக்கும்படியும் நீர்நிலை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும்படி முதல்வர் மோகன் சரண் மஜி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுஉள்ளார்.