தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அயோத்தி கோவில் திருட்டு வழக்கில் இரண்டு மாஜி அதிகாரிகள் சாட்சிகளாயினர்

அயோத்தி கோவில் திருட்டு வழக்கில் இரண்டு மாஜி அதிகாரிகள் சாட்சிகளாயினர்

அயோத்தி கோவில் திருட்டு வழக்கில் இரண்டு மாஜி அதிகாரிகள் சாட்சிகளாயினர்

2


ADDED : செப் 27, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 02:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கில், ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவின் முன்னாள் நிர்வாகிகள் இருவர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பிடி இறுகுவதால் நிர்வாகத்தினர் பீதியில் உறைந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் அயோத்தியில், 2024 ஜனவரியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ராமர் கோவில் கட்ட தொடங்கியபோது பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் என தாராளமாக நன்கொடைகளை வாரி வழங்கினர்.

குற்றாவாளிகள்


மேலும், நாடு முழுதும் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், ராமர் கோவிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் மற்றும் காணிக்கைள் திருடப்பட்டு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இக்குழு, கோவில் ஊழியர்கள், கோவிலை நிர்வகித்து வரும் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டபோது, ஊழியர்கள் சிலர் லட்சக்கணக்கில் பணத்தை கையாடல் செய்து, அதை மறைத்து வைத்து பின்னர் கோவிலில் இருந்து வெளியே எடுத்துச் சென்றதை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

காணிக்கை எண்ணும் அறையின் பொறுப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, அறக்கட்டளையுடன் தொடர்புடைய மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்த தின்னு யாதவ் உட்பட எட்டு பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனால், ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவின் அறங்காவலராக இருந்த அனில் குமார் மிஸ்ரா, பொதுச்செயலர் சம்பத் ராய் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு, அயோத்தியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 76,000 பக்கங்கள் கொண்ட பிரமாண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அதில், ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவின் முன்னாள் அறங்காவலர் அனில் குமார் மிஸ்ரா, முன்னாள் பொதுச் செயலர் சம்பத் ராய் உட்பட 133 பேரை அரசு சாட்சியங்களாக சேர்க்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட எட்டு பேர் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகத்திற்குள் இருந்த காணிக்கை எண்ணும் அறையில் பணம் திருடப்பட்ட காட்சிகள் அங்கு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் 100 முறைக்கு மேல் பதிவாகி இருக்கின்றன.

குறிப்பாக, குற்றஞ்சாடப்பட்ட அவினாஷ் சுக்லா என்பவர் 85 முறையும், கருணாஷ் பாண்டே இரு முறையும் பணம் திருடியதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற ஊழியர்கள் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 4 அன்று நிகழ்ந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவின் முன்னாள் பொதுச் செயலர் சாட்சியம் அளித்துள்ளார். அதில், கோவில் கழிப்பறையில் இருந்து பணம் மீட்கப்பட்டதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், அமெரிக்க டாலர்கள் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் பறிமுதல் செய்து மீட்டுள்ளனர்.

குற்றப்பத்திரிக்கை


அவினாஷ் சுக்லாவிடம் இருந்து 20.39 லட்சம், அனுகல்ப் மிஸ்ராவிடம் இருந்து 18.07 லட்சம், லவ்குஷ் மிஸ்ராவிடம் இருந்து 14.25 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் பதிவுகள், வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவையும் குற்றப்பத்திரிகைக்கு வலுசேர்க்கும் வகையில் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ராமர் கோவில் நன்கொடை திருட்டு தொடர்பான வழக்கில், மத்திய அரசின் பிடி இறுகுவதால், கோவில் நிர்வாகத்தினர் பீதியில் உறைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us