தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மேலும் இரண்டு வாக்குறுதிகள்! அறிவித்தார் காங்., தலைவர்

மேலும் இரண்டு வாக்குறுதிகள்! அறிவித்தார் காங்., தலைவர்

மேலும் இரண்டு வாக்குறுதிகள்! அறிவித்தார் காங்., தலைவர்


ADDED : மார் 16, 2024 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், அதிக ஓட்டுகளை பெறும் நோக்கில், மேலும் இரண்டு வாக்குறுதிகளை காங்கிரஸ் நேற்று அறிவித்தது.

இதுதொடர்பாக, பெங்களூரில் காங்கிரஸ் தேசிய தலைவர் காங்கிரஸ் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

நாங்கள், 15 அம்சங்கள் கொண்ட திட்டத்தை வகுத்துள்ளோம். 'கிசான் நியாய்' எனும் விவசாயிகளுக்கான வாக்குறுதி, 'யுவ நியாய்' எனும் இளைஞர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்துள்ளோம்.

தற்போது மேலும் 'ஷிரமிக் நியாய்' எனும் தொழிலாளர்களுக்கான வாக்குறுதி மற்றும் 'ஹிசேதாரி நியாய்' எனும் ஒடுக்கப்பட்டோருக்கான வாக்குறுதி என இரண்டு வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.

இந்தத் திட்டங்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், ஏழைகளுக்கும் பயனளிக்கும். அனைவருக்கும் சமமான நீதி, சமூக மற்றும் அரசியல் சமத்துவம் கிடைக்க வேண்டும். எங்கள் வாக்குறுதிகளில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டம், சமூக நீதி, குறைந்தபட்ச ஊதிய சட்டம், வருங்கால வைப்பு நிதி சட்டம், காப்பீட்டு சட்டம் இருக்கும்.

* 100 நாள் வேலை உறுதி திட்டம்

காங்கிரஸ் அமல்படுத்திய பல திட்டங்களை, கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு புறக்கணிப்பது துரதிர்ஷ்டமானது. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பணி நாட்களை அதிகப்படுத்தவில்லை. காங்கிரஸ் அரசு, கூட்டாட்சி நடைமுறையை கவுரவிக்கிறது. மத்திய அரசு உரிய நேரத்தில் நிதியுதவி வழங்கினால், திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருக்கும்.

தன் பங்கு வரி தொகையை கேட்டு, மாநில அரசு பல முறை கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசு பதிலளிக்கவில்லை. வேலை உறுதித் திட்டத்தில், பிரதமர் மோடிக்கு ஆர்வம் இல்லை. முக்கிய திட்டங்களை அலட்சியம் செய்கிறது. மோடி அரசுக்கு ஏழைகள் மீது அக்கறை இல்லை.

ஏழைகள், பணக்காரர்களுக்கு நடுவிலான இடைவெளியை குறைக்கும் நோக்கில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது சமூக வளர்ச்சிக்கு உதவும். இதை பிரதமர் எதிர்க்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம்.

* பட்டியல் எப்போது?

'இண்டியா' கூட்டணியில், எந்த குழப்பங்களும் இல்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக, மார்ச் 17 அல்லது 18ல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்.

'இண்டியா' கூட்டணி, 543 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடும். சில இடங்களில் எங்களுக்கு தேவையான தொகுதியை, கூட்டணி கட்சியினர் கேட்கின்றனர். அவர்களுக்கு தேவையான தொகுதிகளை, நாங்கள் கேட்கிறோம். இதுதொடர்பாக, ஆலோசனை நடக்கிறது.

தமிழகத்தில் 10 தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுத்துள்ளனர். உத்தரபிரதேசத்தில், ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ளது. டில்லியில் ஆம் ஆத்மி கட்சி, சில தொகுதிகளை எங்களுக்கு கொடுத்துள்ளது. சிறு சிறு பிரச்னைகளை நாங்கள் பேசி, சரி செய்து கொள்வோம்.

மஹாராஷ்டிராவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சென்றுள்ளனர். அங்கு தொகுதி பங்கீடு குறித்து, முடிவு செய்யப்படும். பிரதமர் மோடி, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை பிடிப்போம் என, கூறியுள்ளார்.

* கர்நாடகா இலக்கு

கர்நாடகாவில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து, ஏற்கனவே முதல்வர், துணை முதல்வருக்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். எத்தனை தொகுதிகள் என்பதை பகிரங்கப்படுத்த முடியாது. அது ரகசியம்.

முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, முக்கிய தலைவர்கள் தலைமையில், தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவு வெளியான பின், கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

'ஷிரமிக் நியாய்' வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்:

* காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு சுகாதார உரிமை, மருத்துவம், சிகிச்சை, நோய் கண்டறிதல், அறுவை சிகிச்சை ஆகியவை இலவசமாக வழங்கப்படும்* 'நரேகா' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்* நரேகா மாதிரியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துதல்; அதன் மூலம் பொது உள்கட்டமைப்பு மற்றும் நகரங்களில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், சமூக சேவைகளில் உள்ள இடைவெளியை குறைத்தல்* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு உட்பட சமூக பாதுகாப்பை வழங்குதல்* மோடி அரசால் அமல்படுத்தப்பட்ட தொழிலாளர் விரோதச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு தொழிலாளர்களின் உரிமைகள் மீட்கப்படும்.



'ஹிசேதாரி நியாய்' வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்:

* தேசிய அளவில் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, நாட்டின் செல்வத்தை சமமாக பகிர்ந்தளிக்கப்படும். நிர்வாகத்தில் அனைத்து வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்* எஸ்.சி.,க்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு தடையாக உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடுக்கான வரம்பை, சட்டத்திருத்தம் மூலம் அதிகரிக்கப்படும்* பழங்குடியினரின் வன உரிமைகள் பாதுகாக்கப்படும். நிலுவையில் உள்ள வன உரிமை சட்ட கோரிக்கை ஓராண்டில் நிறைவேற்றப்படும். இது தவிர, சிறு வன விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும். வனப் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் செய்யப்பட்ட வறுமை ஒழிப்பு திருத்த சட்டங்கள் ரத்து செய்யப்படும்* ஆதிவாசிகளுக்கு சுயாட்சி மற்றும் கலாச்சார பாதுகாப்பு உரிமை வழங்கப்படும்* மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில், வனப்பகுதிகளில் இருந்து பழங்குடியினர் இடம் பெயர்கின்றனர். அவர்களுக்கான நீர், காடு, நிலம் பாதுகாப்போம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us