சத்தீஸ்கர் என்கவுன்டரில் நக்சல்கள் இருவர் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் என்கவுன்டரில் நக்சல்கள் இருவர் சுட்டுக்கொலை
ADDED : ஜன 29, 2026 04:49 PM

பிஜப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று (ஜனவரி 29) நடந்த மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் தெற்குப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர், நக்சல் எதிர்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது, நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சண்டையின்போது, நக்சல்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு 9-எம்எம் பிஸ்டல் மற்றும் வெடிபொருட்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அங்கு தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தாண்டில் தற்போது வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை நடந்த பல்வேறு மோதல்களில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
