வேட்டைக்கு சென்ற இருவர் கைது; நாட்டுத்துப்பாக்கி, தோட்டா பறிமுதல்
வேட்டைக்கு சென்ற இருவர் கைது; நாட்டுத்துப்பாக்கி, தோட்டா பறிமுதல்
ADDED : டிச 03, 2024 06:42 AM

பாலக்காடு; பாலக்காடு அருகே, வாகன பரிசோதனையின் போது, வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டுத்துப்பாக்கி, தோட்டாகளுடன் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் மாயன்னூர் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, இன்ஸ்பெக்டர் அஜீஷின் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புது காரில் சந்தேகப்படும் வகையில் இருவர் வந்தனர். காரில் நடத்திய சோதனையில், பின்பக்க இருக்கையில் பிளாஸ்டிக் கவரில் வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டுத்துப்பாக்கி, 8 தோட்டாக்கள், 4 கத்திகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர்கள் மலப்புரம் மாவட்டம் கருவாரக்குண்டு நிலாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அப்துல்சலாம், 38, வண்டூர் கூராடு பகுதியைச் சேர்ந்த ஜமால் ஹுசைன், 25, ஆகியோர் என்பது தெரிந்தது. இவர்கள் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி பயன்படுத்தி மாயன்னூர், சேலக்கரை வனப்பகுதியில் வனவிலங்கு வேட்டைக்கு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, பதிவு செய்யப்படாத புதிய கார், துப்பாக்கி, தோட்டா மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.