மஹா.,வில் அமைச்சர்கள் முன் இருவர் தீக்குளிக்க முயற்சி
மஹா.,வில் அமைச்சர்கள் முன் இருவர் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜன 26, 2025 11:42 PM
மும்பை: மஹாராஷ்டிராவில் குடியரசு தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் நேற்று தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி பீட் பகுதியில் உள்ள அரசு ஓய்வு இல்லத்துக்கு, அமைச்சர் தத்தாத்ரே பர்னே காரில் சென்றார்.
அப்போது வழியில், நிதின் முஜ்முலே என்பவர், பீட் நகராட்சியில் முறைகேட்டில் ஈடுபடும் தலைமை நிர்வாக அதிகாரியை பதவி நீக்கம் செய்யக்கோரி, கேனில் வைத்திருந்த பெட்ரோலை தன் உடலில் திடீரென ஊற்றி தீப்பற்ற வைத்தார். அவரை போலீசார் தடுத்ததால் அவர் உயிர் தப்பினார். பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல், துலே பகுதியில் நேற்று நடந்த குடியரசு தின கொண்டாட்டத்தில் அமைச்சர் ஜெயகுமார் ராவல் பங்கேற்றார்.
அப்போது, சிர்புல் நகரில் இருந்து கால்நடைகளை சட்டவிரோதமாக ஏற்றி செல்வதை தடுக்கக்கோரி புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி, வவ்த்யா பாட்டீல் என்பவர் அமைச்சர் முன்பு திடீரென தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

