ADDED : அக் 21, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்ரதுர்கா : தோட்டத்தில் மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர்.
சித்ரதுர்கா, ஹிரியூரின் கிருஷ்ணாபுரா கிராமத்தில் வசிப்பவர் ஜெயராம். இவரது பாக்கு தோட்டத்தில் சந்தன மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இவற்றை திருடும் நோக்கில், நேற்று முன் தினம் நள்ளிரவு, இரண்டு நபர்கள் தோட்டத்துக்கு வந்தனர்.
எதிர்பாராமல் மின் கம்பியை தொட்டதால், மின்சாரம் பாய்ந்து இருவரும் உயிரிழந்தனர்.
நேற்று காலையில், இவர்கள் இறந்து கிடந்ததை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அப்பினஹளே போலீசார், இருவரின் உடல்களை மீட்டனர்.
மின்சாரம் பாய்ந்து இறந்தவர்கள் மோஹித், 24, கதர்வா, 38, என்பதும், இவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

