ADDED : ஆக 15, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு:பாலக்காடு அருகே, ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட கோவையை சேர்ந்த இருவரை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.
கோவை, அன்னுார் கணேசபுரத்தில் உள்ள சோலார் நிறுவனத்தில், அதே பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ், 23, துாத்துக்குடி காயல்பட்டிணத்தை சேர்ந்த பூபதிராஜ், 26, ஆகியோர் பணியாற்றினர். அந்நிறுவனத்தில் பணிபுரியும் 19 பேர் நேற்று, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடிக்கு சுற்றுலா வந்தனர்.
மாலை நேரத்தில், நரசிமொக்கு என்ற இடத்தில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க இறங்கினர்.
ஆழமான பகுதியில் சிக்கிய, பூபதிராஜ், பிரதீப்ராஜ் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் தேடியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.