விநாயகர் சிலை கரைக்க சென்ற இருவர் யமுனையில் மூழ்கி பலி
விநாயகர் சிலை கரைக்க சென்ற இருவர் யமுனையில் மூழ்கி பலி
ADDED : செப் 18, 2024 09:41 PM
மயூர் விஹார்:டில்லியில் விநாயகர் சிலைகளை கரைக்கச் சென்றபோது யமுனை ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்.
மயூர் விஹார் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகளை கரைக்க ஏராளமானோர் சென்றிருந்தனர்.
அப்போது 21 வயது இளைஞனும் அவரது உறவினரும் யமுனை ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக காவல் துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
டைவர்ஸ், படகுகள், தீயணைப்பு படையினர், என்.டி.ஆர்.எப்., குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், யமுனையில் அதிகப்படியான நீர் இருப்பதால் உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை. விஷால், துஷார், 18, ஆகிய இருவரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காஜியாபாத்தில் வசிக்கும் விஷால், மோட்டார் சைக்கிள் டாக்ஸி ஓட்டி வந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

