ADDED : மே 17, 2025 12:12 AM
கான்பூர்: உத்தரபிரதேசத்தில், தலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரு இன்ஜினியர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யின் கான்பூரில் எம்பயர் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு வினித் துபே, 40, என்ற இன்ஜினியர் தன் வழுக்கை தலையில் முடிமுளைப்பதற்காக டாக்டர் அனுஷ்கா திவாரியை அணுகினார்.
அவர் துபேக்கு மார்ச் 13ல் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்தார். மறுநாள் துபேயின் முகம் வீங்கியதுடன் வலியால் கடும் அவதியடைந்து உயிரிழந்ததாக துபேயின் மனைவி ஜெயா திரிபாதி புகார் அளித்தார்.
இது குறித்த புகாரின் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது கடந்த 9ம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதை தொடர்ந்து, உ.பி.,யின் கான்பூரை சேர்ந்த மயங்க் என்ற இன்ஜினியர் இதே மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மறுநாள் முகம் வீங்கியதுடன் மாரடைப்பில் மயங்க் இறந்ததாக அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அனுஷ்கா திவாரி தலைமறைவானார். இரு தனிப்படை அமைத்து போலீசார் தேடுகின்றனர்.