ADDED : பிப் 19, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்வார், கர்நாடக மாநிலம், கார்வாரில், 'சீ பேர்டு' கடற்படை தளம் உள்ளது. 2023ல் இந்த கடற்படை தளத்தின் ரகசிய தகவல்களை சிலர் கசிய விட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஹைதராபாத் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்த வேவன் தண்டேல், அக் ஷய் நாயக் ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்கள் இருவருக்கும் முகநுால் வாயிலாக, பாகிஸ்தான் பெண் ஒருவருடன் அறிமுகம் கிடைத்தது.
அந்த பெண் கேட்டுக் கொண்டதால், கடற்படை தளத்தின் ரகசிய தகவல்களை அவருக்கு வழங்கியது தெரிந்தது. இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.