தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு

ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு

ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு

2


ADDED : ஜூலை 08, 2026 12:47 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : ஜூலை 08, 2026 12:47 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்கள் ஒரே ஓடுபாதையில் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலிகுரியிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுதளத்தை விட்டு முழுமையாக வெளியேறாமல் இருந்தது. அதே நேரத்தில், மும்பையிலிருந்து டில்லி புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம், அதே ஓடுதளத்தில் வேகமாகப் பயணிக்கத் தயாரானது. இது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓடுதளத்தில் 2 விமானங்களும் ஒரே நேரத்தில் இருப்பதை உணர்ந்த விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி, உடனடியாக ஏர் இந்தியா விமானத்தை நிறுத்துமாறு அவசர உத்தரவு பிறப்பித்தார். பின்னர் அந்த விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நேற்று இரவு 10 மணிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us