ADDED : பிப் 12, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு, ஜம்மு - காஷ்மீரின் எல்லைக்கட்டுபாட்டு கோடு அருகே பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த ஐ.இ.டி., எனப்படும், மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் ராணுவ தளபதி உட்பட இரு வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொருவர் காயம் அடைந்தார்.
ஜம்மு - காஷ்மீரின் அக்னுார் செக்டார் பகுதியில் உள்ள இந்திய - பாக்., எல்லைக்கட்டுபாட்டு கோடு அருகே நேற்று மாலையில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் பட்டால் பகுதி ராணுவ நிலை அருகே சென்றபோது அங்கு பயங்கரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்ட மிகசக்தி வாய்ந்த ஐ.இ.டி., வகை வெடிகுண்டு வெடித்தது.
இதில் ராணுவ தளபதி உட்பட இரு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மற்றொரு வீரர் காயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

