தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை

காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை

காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை


ADDED : மே 19, 2025 09:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 09:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியானில் இந்திய ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், பயங்கரவாதி கூட்டாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சோபியானில் பயங்கரவாதி கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது.

அப்பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், பயங்கரவாதி கூட்டாளிகள் இரண்டு பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், நான்கு கையெறி குண்டுகள், 43 தோட்டாக்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us