காஷ்மீரில் பயங்கரவாத சதி முறியடிப்பு: பயங்கரவாதிகள் இருவரை சுட்டுக்கொன்றது ராணுவம்
காஷ்மீரில் பயங்கரவாத சதி முறியடிப்பு: பயங்கரவாதிகள் இருவரை சுட்டுக்கொன்றது ராணுவம்
ADDED : செப் 09, 2024 08:30 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்து, பங்கரவாதிகள் இரண்டு பேரை சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக, பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் செயல்பட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் எல்லை மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்து, பங்கரவாதிகள் இரண்டு பேரை சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்துஏ.கே., 47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.
சில பயங்கரவாதிகள் தப்பி ஓடி இருக்கலாம் என ராணுவத்தினர் சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.