ADDED : டிச 25, 2024 12:53 AM
புதுடில்லி,
ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் வாகன விற்பனை மந்தமாக இருப்பது வழக்கம். வாகனங்களை மறுவிற்பனை செய்யும் போது அதன் மதிப்பு குறையும் என்பதால், டிசம்பரில் வாகனங்களை வாங்க பெரும்பாலானோர் விரும்புவதில்லை.
இதன் காரணமாக, டிசம்பரில் பல்வேறு சலுகைகளை வாகன விற்பனையாளர்கள் அறிவிப்பது வழக்கம்.
இதை தொடர்ந்து நடப்பு டிசம்பர் 1 - 24 வரையில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகன விபரங்கள், தேசிய வாகன பதிவேடான, 'வாகன்'னில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி, 2024 டிச., 1 - 24 வரை, 13.90 லட்சம் இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 16.40 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு இருசக்கர வாகனங்களின் பதிவு 15 சதவீதம் வீழ்ச்சிஅடைந்துள்ளது.
பயணியர் போக்குவரத்து வாகனங்களின் பதிவு 1 சதவீதமும், வணிக வாகனங்களின் பதிவு 9 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதில், பெட்ரோல் வாகனங்களின் விற்பனை 21 சதவீதம் சரிந்துள்ளது.