ADDED : நவ 01, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: பாலக்காடு எஸ்.பி., ஆனந்த் அறிவுரையின்படி, ஒற்றைப்பாலம் எஸ்.ஐ., சுனில் தலைமையிலான போலீசார், நேற்று காலை தெற்கு பனமண்ணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழி சொரனூர் பகுதியில் இருந்து வந்த காரை நிறுத்தி, சோதனை செய்தனர்.
காரில், 30 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நடத்திய விசாரணையில், காரில் பயணித்தவர்கள் மண்ணார்க்காடு தச்சநாட்டுகரை செத்தல்லூர் பகுதியை சேர்ந்த பாபுராஜ், 32, பிரகாஷ், 35, என்பதும், திருச்சூர் பகுதியில் இருந்து கொண்டு வந்த கஞ்சாவை ஒற்றப்பாலம் பகுதியில் விற்பனை செய்வதற்கு கடத்தியதும் தெரிய வந்தது.
போலீசார், வாலிபர்கள் இருவரையும் கைது செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.