ADDED : டிச 22, 2024 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு:கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மக்கரபரம்பு பகுதியைச் சேர்ந்த ஹுசைன் மகன் ரின்ஷாத், 22. மடக்கன்கரை பகுதியைச் சேர்ந்த குஞ்சன் மகன் ஹரீஷ், 28. இருவரும், கூலி வேலைக்கு சென்று வந்தனர். இருவரும் நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு, மலப்புரத்தில் இருந்து பாலக்காடு- - கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில், பாலக்காடு நோக்கி பைக்கில் வந்தனர்.
புதுப்பரியாரம் அருகே வந்த போது, மலப்புரம் நோக்கி சென்ற லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. கீழே விழுந்த பைக்கில் சென்ற இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில், பைக் தீப்பிடித்து எரிந்தது. ஹேமாம்பிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவையை சேர்ந்த லாரி டிரைவர் வினோத்குமாரை கைது செய்தனர்.