ADDED : செப் 23, 2024 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: காங்கிரசின் அகில இந்திய இளைஞர் பிரிவுக்கு தலைவராக உள்ள பி.வி.ஸ்ரீனிவாசுக்கு பதிலாக, புதிய தலைவராக உதய் பானு சிப் என்பவரை நியமித்து, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக காங்., வெளியிட்டுள்ள அறிக்கை:
இளைஞர் காங்.,கின் பொதுச்செயலராக உள்ள உதய் பானு சிப், இந்த அமைப்பின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஜம்மு - காஷ்மீர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஏற்கனவே பணியாற்றியவர். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில், முன்னாள் இளைஞர் காங்., தலைவராக பணியாற்றிய ஸ்ரீனிவாசின் பங்களிப்பையும் கட்சி பாராட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.