UPDATED : ஆக 07, 2024 03:31 AM
ADDED : ஆக 06, 2024 09:34 PM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி ராகுல் உள்ளிட்ட காங்., தலைவர்களை சந்திக்க டில்லி செல்ல உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ,பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர்க்கட்சியான ‛‛மஹா விஹாஸ் அகாடி'' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் உள்ளிட்ட கட்சிகள், இந்த சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளன.
இந்த சூழ்நிலையில் உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மூன்று நாள் பயணமாக இன்று டில்லி செல்ல உள்ளதாகவும், அங்கு ராகுல், சோனியா, கார்கே மற்றும் இண்டியா கூட்டணியில் உள்ள சில தலைவர்களையும் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.