தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வெறிச்சோடியது உத்தவ் சிவசேனா தலைமையகம்!

வெறிச்சோடியது உத்தவ் சிவசேனா தலைமையகம்!

வெறிச்சோடியது உத்தவ் சிவசேனா தலைமையகம்!


ADDED : நவ 23, 2024 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 10:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மஹாயுதி கூட்டணியின் சுனாமியால், உத்தவ் சேனா தலைமையகம் வெறிச்சோடி சோகமாக காணப்பட்டது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகம் மும்பை தாதர் கிழக்கில் அமைந்துள்ளது.

இன்று சட்டசபை தேர்தலில் அந்த கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், கட்சி தலைமையகம், ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நுழைவு வாசலில் காவலுக்கு 8 போலீஸ்காரர்கள் மட்டுமே சேரில் அமர்ந்து இருந்தனர். யாருமே இல்லாததால், பாதுகாவலர் மட்டுமே நின்று கொண்டிருந்தார்.

வழக்கமாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் கட்சித் தொண்டர்களால் பரபரப்பாக காணப்படும் இந்த கட்டடம் களை இழந்து காட்சியளித்தது.

288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் உத்தவ் சேனா அணி, 95 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

இது குறித்து அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான முகமது ஷகில் குரேஷி கூறுகையில்,

நாங்கள் இன்னும் பலமாக இருக்கிறோம், நம்பிக்கை இழக்கவில்லை. மும்பையில் சிறப்பாக செயல்பட்டோம், ஆனால் மாநிலத்தில் தடுமாறினோம் என்றார்.

சிவசேனா (யுபிடி) மற்றொரு தலைவர் சுஷ்மா அந்தரே கூறுகையில்,

முடிவுகள் எதிர்பார்க்கப்படாதது மட்டுமல்ல, நம்பமுடியாததும் கூட. எங்களுக்கு சின்ன ஆறுதல் என்னவென்றால், தாதர் பகுதியை உள்ளடக்கிய மஹிம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றது.

ஷிண்டே பிரிவினரிடமிருந்து இந்த இடத்தைப் பெற முடிந்தது.

மேலும் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் மகன் அமித் தாக்கரேவையும் தோற்கடித்தது.

அக்கட்சி 125 இடங்களில் போட்டியிட்ட போதிலும் வெற்றிபெற முடியவில்லை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us