பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டு இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு தள்ளி வைப்பு
பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டு இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு தள்ளி வைப்பு
ADDED : ஜன 13, 2025 08:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி; பொங்கல் நாளில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 15 ல் யு.ஜிசி. நெட் தேர்வுகள் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. பொங்கல் நாளில் தேர்வு என்பதால் தேதியை மாற்றக் கோரி முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கோவி. செழியன் உள்ளிட்ட பலர் கடிதம் எழுதி இருந்தனர்.
இந் நிலையில், ஜன. 15ம் தேதி நடத்தப்பட இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை கூறி உள்ளது.
அதே நேரத்தில் ஜன.16ம் தேதி நடைபெறும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.