யு.ஜி.சி. நெட் மறு தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியிட்டது என்.டி.ஏ.,
யு.ஜி.சி. நெட் மறு தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியிட்டது என்.டி.ஏ.,
ADDED : ஜூன் 29, 2024 12:09 AM

புதுடில்லி: ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி,நெட் மறு தேர்வுகள் ஆக. 21 மற்றும் செப்.04 என இருகட்டங்களாக நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான, யு.ஜி.சி., நெட் தேர்வுகளை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
நாடு முழுதும் கடந்த 18ம் தேதி நடந்த யு.ஜி.சி., நெட் தேர்வுக்கு 11 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். தேர்வு முடிந்த மறுநாளான 19ம் தேதி, தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியான விபரம் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த யு.ஜி.சி., நெட் தேர்வை, தேசிய தேர்வு முகமை ரத்து செய்யப்படுவதாக கடந்த 19-ம் தேதி அறிவித்தது. வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து சி.பி.ஐ.., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் யு.ஜி.சி. நெட் மறு தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 21 ம் தேதியும், செப்டம்பர் 04-ம் தேதியும் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வேளை இத்தேதிகளுக்கு பதிலாக ஜூலை 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்திடவும் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

