பிரிட்டீஷ் இளவரசர் இந்தியா வருகை: மகாராஷ்டிரா கவர்னருடன் சந்திப்பு!
பிரிட்டீஷ் இளவரசர் இந்தியா வருகை: மகாராஷ்டிரா கவர்னருடன் சந்திப்பு!
UPDATED : பிப் 04, 2025 09:14 PM
ADDED : பிப் 02, 2025 01:04 PM

புதுடில்லி: பிரிட்டன் மன்னர் சார்லஸின் இளைய சகோதரர், இளவரசர் எட்வர்டு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை ராஜ்பவன் சென்ற அவர், மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாருஷ்ணனை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.
பிரிட்டன் மன்னர் சார்லஸின் இளைய சகோதரர், இளவரசர் எட்வர்டு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லி, மும்பையில், கல்வி, தொழில் துறையினர், கொடையாளர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.இன்று மும்பை சென்ற இளவரசர் சார்லஸ், ராஜ்பவன் மாளிகையில் மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். இருவரும், இரு நாட்டு உறவுகள் பற்றி பேசினர். இளவரசருக்கு, சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை கவர்னர் அன்பளிப்பாக வழங்கினார்.
முன்னதாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியா வந்துள்ள இளவரசர் எட்வர்டு, விளையாட்டு மற்றும் கலைத்துறை தொடர்பாக மும்பை, டில்லியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.எடின்பரோ கோமகன் சர்வதேச விருது (Duke of Edinburgh's International Award), உலகின் முன்னணி இளைஞர்களுக்கு வழங்கப்படும் சாதனை விருது. இது 14 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு அவர்களின் கலாசாரம், உடல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
130 க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் இளைஞர்கள் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த விருதை விளம்பரப்படுத்துவதற்காக இளவரசர் எட்வர்டு இந்தியா வருகை தந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.