பெயரில் மட்டுமே கிரேட்... பாதுகாப்பு சபையில் பிரிட்டன் இருந்தும் பயனில்லை; இந்தியாவுக்கு இடம் தர வலியுறுத்தல்
பெயரில் மட்டுமே கிரேட்... பாதுகாப்பு சபையில் பிரிட்டன் இருந்தும் பயனில்லை; இந்தியாவுக்கு இடம் தர வலியுறுத்தல்
UPDATED : செப் 01, 2024 08:01 AM
ADDED : செப் 01, 2024 07:46 AM

புதுடில்லி: 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள் தேவை. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும்' என சிங்கப்பூர் முன்னாள் தூதரக பேராசிரியர் கிஷோர் மஹ்புபானி தெரிவித்தார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இன்று உலகின் மூன்றாவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பெயரில் மட்டும் 'கிரேட்' என வைத்திருக்கும் பிரிட்டனை இனியும் பெரிய நாடாக கருத வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பல வருடங்களாக ஐ.நா., பாதுகாப்பு சபையில் தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. பிற நாடுகளின் அதிருப்திக்கு பயந்து அதை செய்யாமல் இருக்கின்றனர்.
இதனால் பிரிட்டன் செய்ய வேண்டிய விஷயம் தனது இருக்கையை இந்தியாவுக்கு விட்டு கொடுக்க வேண்டும். முந்தைய காலகட்டத்தில் ஐ.நா.,வின் நிறுவனர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இப்போது அப்படியில்லை.
இந்தியாவுக்கு இடம்!
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐ.நா.,வின் நிறுவனர்கள் ஒரு பெரிய வலுவான நாடு வெளியேறினால், அமைப்பு சரிந்துவிடும் என்று நம்பினர். அப்படித்தான் 5 நாடுகளுக்கும் நிரந்தர இடம் கிடைத்தது. இப்போது நிலைமை மாறி விட்டது. எனவே பாதுகாப்பு சபையில் தனது நிரந்தர இடத்தை பிரிட்டன் விட்டுக்கொடுத்தால், அது அவர்களை சுதந்திரமாக செயல்பட உதவிகரமாக இருக்கும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள் தேவை. உயர்மட்ட அமைப்பான பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.