உடன்பாடின்றி தோல்வியில் முடிந்தது ஐ.நா., காலநிலை உச்சி மாநாடு
உடன்பாடின்றி தோல்வியில் முடிந்தது ஐ.நா., காலநிலை உச்சி மாநாடு
ADDED : நவ 22, 2026 08:57 PM
அன்டால்யா: மேற்காசிய நாடான துருக்கியின் அன்டால்யா நகரில் நடந்த சி.ஓ.பி., – 31 எனப்படும் ஐ.நா., காலநிலை உச்சி மாநாடு, படிம எரிபொருள் பயன்பாட்டை குறைத்தல், காலநிலை நிதி மற்றும் உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான கடுமையான கருத்து வேறுபாடுகள் உள்ளிட்டவைகளில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் இன்று (நவ.,22) பேச்சு தோல்வியில் முடிந்தது.
கடந்த 20ம் தேதியுடன் முடிய வேண்டிய இம்மாநாடு உறுப்பு நாடுகளிடையே ஒத்த கருத்து ஏற்படாததால் கூடுதலாக 48 மணி நேரம் நடந்தது. இருப்பினும், 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடையே மூன்று முக்கிய விவகாரங்களில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. குறிப்பாக, படிம எரிபொருட்களை விலக்குவது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களை சரி செய்ய வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு, ஐரோப்பிய யூனியன் கார்பன் வரி என்ற பெயரில் எடுக்கும் ஒருதலைபட்சமான வர்த்தக நடவடிக்கை உள்ளிட்டவையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
பேச்சில் அங்கீகரிக்கப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் ஏறக்குறைய ஒருமித்த கருத்தை கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாததால், ஐ.நா., காலநிலை உச்சி மாநாடு பேச்சு உடன்பாடின்றி தோல்வியில் முடிந்தது.
