ADDED : ஏப் 05, 2026 12:06 AM

மஹா., துணை முதல்வராக இருந்த அஜித் பவார் மறைவால் காலியான பாராமதி சட்டசபை தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், அவரது மனைவி சுநேத்ராவை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில், அனைத்து கட்சிகளும் இதில் ஒருமனதாக முடிவெடுக்க வேண்டும்.
தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிர முதல்வர், பா.ஜ.,
நம்ப வேண்டாம்!
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், 'இரட்டை இன்ஜின்' அரசு என, பா.ஜ., கூறுகிறது. இதை நம்ப வேண்டாம். மத்திய பா.ஜ., அரசு, தேர்தல் கமிஷனை தவறாக பயன்படுத்தி வருகிறது. மாநில பா.ஜ., அரசுகள், மதக் கலவரத்தை துாண்டி வருகின்றன. இது தான் அக்கட்சி கூறும் இரட்டை இன்ஜின் அரசு.
அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி., திரிணமுல் காங்., கட்சி
நாடகமாடுகின்றனர்!
கேரள பா.ஜ., நிர்வாகிகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் தருகின்றனர். அதே சமயம், கிறிஸ்துவர்களை பாதிக்கும் சட்டத்திருத்தத்துக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர். நல்லவர்கள் போல நாடகமாடுகின்றனர். வக்ப் சட்டத்திருத்தத்தை போல, 'சர்ச் மசோதா'வையும் மத்திய பா.ஜ., அரசு விரைவில் கொண்டு வரும்.
வி.டி.சதீஷன் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்
