ADDED : செப் 04, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டின் மக்கள்தொகையில் பாதி அளவு உள்ள பெண்களுக்கு பொருளாதார பலம் அளிப்பது, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஆண்கள், பெண்களின் திறனை புரிந்து, அவர்களின் கனவுகளை அடைய உதவ வேண்டும்.
திரவுபதி முர்மு, ஜனாதிபதி
புல்டோசர் திருப்பி விடப்படும்!
எதிர்க்கட்சிகளை அடக்குவதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் வைத்து அப்பாவிகளின் வீடுகளை இடிக்கிறார். 2027 சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெற்றால், அனைத்து புல்டோசர்களும் யோகியின் கோட்டையான கோரக்பூருக்கு திருப்பி விடப்படும்.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
அதற்கு தைரியம் வேண்டும்!
கலவரக்காரர்களுக்கு முன் மண்டியிடுபவர்களால் புல்டோசர் முன் தாக்கு பிடிக்க முடியாது. புல்டோசரை இயக்க தைரியமும், அறிவும் வேண்டும். புல்டோசர் போன்ற திறனும், உறுதியும் உள்ள ஒருவரால் மட்டுமே அதை இயக்க முடியும்.
யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,