ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த புரிதல் வேதனையளிக்கிறது: குடியரசு துணை தலைவர்
ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த புரிதல் வேதனையளிக்கிறது: குடியரசு துணை தலைவர்
ADDED : ஜன 03, 2025 07:06 PM

புதுடில்லி: ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த புரிதல் வேதனை அளிப்பதாக குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தங்கர்  தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள ஜே.என்.யூ., பல்கலையில் இன்டர்நேஷனல் காங்கிரஸ் ஆப் வேதாந்தா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர்  ஜக்தீப் தங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: இந்தியாவில் சனாதனம் மற்றும் ஹிந்து பற்றிய குறிப்புகள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளன. இது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.  இந்த வார்த்தையின் ஆழமான அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கு பதிலாக, அதற்கு எதிர்வினை ஆற்றுவதை வழக்கமாக்கி கொண்டனர்.
இதுபோன்ற எண்ணங்கள் கொண்டவர்களை, அவர்களின் ஆத்மாக்கள் தவறாக வழிநடத்துகின்றன. ஆபத்தான சுற்றுச்சூழல் சமுதாயத்திற்கு மட்டும் அச்சுறுத்தல் கிடையாது, அவர்களுக்கு அச்சுறுத்தல்தான், எனக் கூறினார்.

