ADDED : ஜூன் 13, 2025 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கபூர்தலா:பஞ்சாபின் கபூர்தலா நகரில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி, மாரடைப்பு காரணமாக இறந்தார்.
கபூர்தலா நகரில் உள்ள சிறையில், அந்த மாநிலத்தின் ஜலந்தர் நகரை சேர்ந்த சியான் தாஸ் ஆனந்த், 76, என்பவர் அடைக்கப்பட்டிருந்தார். பண மோசடி வழக்கில், அவருக்கு 20 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டிருந்ததால், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறை அதிகாரிகள் அவரை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் இறந்தார்.
அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

