அப்படியே இருக்குது வேலையில்லா திண்டாட்டம்: அகிலேஷ் யாதவ் பேட்டி
அப்படியே இருக்குது வேலையில்லா திண்டாட்டம்: அகிலேஷ் யாதவ் பேட்டி
ADDED : ஜூலை 10, 2024 05:18 PM

லக்னோ: 'வேலையில்லா திண்டாட்டம் அப்படியே உள்ளது. இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள்' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அகிலேஷ் யாதவ் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஹாத்ரஸ் சம்பவத்தில் அரசு தனது தோல்வி என்பதை ஒப்புக்கொண்டது. அதனால் தான் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அரசின் தவறான நிர்வாகத்தால், இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை காட்டுகிறது.
உ.பி.யில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவோம் என கூறியவர்கள், அவர்களின் ஸ்மார்ட் சிட்டியை பார்க்கலாம். எங்கு பார்த்தாலும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் மோசமாக இருப்பதால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. சுகாதார வசதிகளும் மோசமாகிவிட்டன. வேலையில்லா திண்டாட்டம் அப்படியே உள்ளது. இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.